உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா
என்னை விட்டு ஏன் சென்றாய் என்று
எங்கே சென்றாய் என்று
எதற்காக சென்றாய் என்று
உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா
என்னுயிரே திரும்பி வந்துவிடு என்று
என்னோடு வந்துவிடு என்று
எனக்காகவே வந்துவிடு என்று
உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா
என்சோகங்கள் கரைந்துவிடட்டும் என்று
என்பாவங்கள் அழிந்துவிடட்டும் என்று
என் சாபங்கள் நீங்கிவிடட்டும் என்று
உன்னைக்கட்டி ஒருவாட்டி கதறவா...!

Aucun commentaire:
Enregistrer un commentaire