vendredi 3 juillet 2015

மாறிப்போகும் மானிடம்...!




அறியாதா பெண்மை 
கனவுகள் பல கண்டு 
கற்ப்பனையில் மிதப்பவள்
பெற்றவர் பார்ப்பவனை 
மறு பேச்சின்றி மணம் கொண்டு 
புது வாழ்வு தொடங்கிட 
கடக்கும் சில ஆண்டு சிரித்து பழகிவிட்டு 
சில்லறை மனிதனாய் மாறிடும் போதே 
மனம் உடைந்து போகின்றாள் 
யாரிடம் சொல்லியழுதிட
பெற்றவர்கள் மனம் உடைந்து 
என்ன ஆவார்கள் 
மற்றவர்கள் பேசும் வார்த்தைகள் 
மீண்டும் மீண்டும் கூறு போடும் 
இவள் மனதையே 
காசு பணம் கேட்டாளா 
இல்லை அன்பை தானே கேட்டாள்
சொத்து சுகம் கேட்டாளா
இல்லை அரவணைப்பை தானே கேட்டாள்
அவள் மனம் புரிந்து கொள்ள முடியாத நீ 
மணம் கொண்டது எதற்கு 
பிள்ளைகள் பெற்றது எதற்கு 
உன் இஸ்டம் போல்
நீ தனிமையிலே 
வாழ்ந்து விட்டு போயிருக்கலாமே
பாவம் அறியாத பெண்மை 
என்ன செய்தாள் 
அவள் வாழ்வை புதிராக்கிவிட்டாயே 
கசங்கிய விழியோடு 
கண்ணீரால் அவள் வரைந்தாள்...!

Aucun commentaire:

Enregistrer un commentaire