samedi 14 novembre 2015

உலகமே நீயென்று சுற்றியே வந்திடுவேன்...!


காற்றிலே ஒருசேதி அனுப்பி வைத்தேனே 
உயிரே உன்னிடம் வந்து சேர்ந்ததோ 
உறவாய் வந்தவனே  உணர்ந்தாயோ 
உதிரம் கலந்த நினைவுகளில் நீ 
உள்ளே இருந்தே சீண்டுகின்றாய் 
உறக்கம் இன்றி புலம்புகின்றேன் 
உன்னையே தேடி விழிக்கின்றேன் 
உலகமே நீயென்று சுற்றியே வந்திடுவேன்...!



mercredi 11 novembre 2015

என்னுயிர் துளிகள்...!


இலகுவாய் நீ கண்ணீர் சிந்துகின்றாய்  
உயிரே ஒன்று தெரிந்துகொள்
நீ  சிந்தும் ஒவ்வொரு துளியும் 
உன் கண்ணீர்  துளிகள்ளல்ல 
அது என்னுயிர் துளிகள்...!

ஆதாமும் பொறாமை கொள்வான்...!


ஆதாமும் பொறாமை கொள்வான் அன்பே 
நான் உன்மேல் கொண்ட நேசம்கண்டு
யாரும் வைத்திராத அன்பு எனதே  
அம்பாய் உன்மேல் எய்திடவோ 
தாங்கி கொள்வாயோ என்றேக்கத்திலே 
பாதியே தருகிறேன் பாசத்திலே
திணறி போகும் என் காதலில் 
மூழ்கிட வருவாய் விரைவினில் 
விழி நோக்கும் இடமேதும் தெரிவதில்லை 
வின்பத்தில் உன்னுருவம் ஒன்றுதான் 
மனதிலே வேறு எண்ணம் ஏதுமில்லை 
உயிரே உன் நினைவோன்றுதான் 
நீ வெறுக்கும் நேரம் கூட 
என்னால் உன்னை நேசிக்க மட்டுமே 
முடிகின்றது....!


mercredi 9 septembre 2015

இதழோரம் புன்னகைத்தேன்...!


இமை மூடி பேசினேன் 
இதழ் மூடி பேசினேன் 
இஸ்டபடி பேசினேன் 
இடை விடாது பேசினேன் 
இறுதியிலே விழித்து பார்த்தேன் 
இது வெறும் கனவென்றறிந்து
இதழோரம் புன்னகைத்தேன்...

dimanche 6 septembre 2015

நீ மட்டும் ஒருவனே...!


வழியாத ஆண்மை 
கானல் நீர் திமிரு 
காந்த பார்வை 
அழகிய ரசனை 
மயக்கும் நடை 
ஈர்க்கும் பேச்சு 
இன்னும் எத்தனையோ 
உனக்கு மட்டும் 
பொருத்தமானவை 
உன்னை போல் 
எவனும் இல்லை 
இவ்வுலகிலே 
நீ மட்டும்
ஒருவனே...!

உனக்காகவே காத்திருக்கும்...


மனதிலே காதல் மெல்ல மெல்ல மலரும் 
உன் நினைவிலே என்  உள்ளம் குளிரும் 
உன்னை பார்க்கவே விழிகள் துடிக்கும் 
ஆசையாய் பேசிட வார்த்தைகள் தவிக்கும்
கவிதை கவிதையாய் ஊற்றெடுக்கும்
காகிதத்தில் குவிந்து கிடக்கும் 
உனக்காகவே காத்திருக்கும்...

mardi 1 septembre 2015

உன் ஒற்றை பார்வை...!


ஒர பார்வை 
உன் ஒற்றை பார்வை 
சிறு வினாடியில் 
அம்பாய் எய்து விட்டாய் 
பல நேரங்கள் கழிந்தும் 
நடுசாமம் ஆகிய பின்பும் 
ஏனோ எனது விழிகள்
மூட முடியாது துடிக்கின்றது  
துடிக்கும் துடிப்பிலும் 
புது இன்பம் கான்கிறது
என் மனம்...

samedi 29 août 2015

நலம் வாழ வாழ்த்துகின்றோம்...!


கனவுகள் சுமந்து வந்த 
மாங்கல்யநாள் இன்று 
இருவர் இணைந்து 
உறவுகள் பெருகிய நாளின்று 
மனமெங்கும் இன்பங்கள் பொங்கி
இதயத்தினில் ஊற்றெடுத்து 
உள்ளம் நெகிழ்ந்து வாழ்த்தும் 
வாழ்த்துகள் குவித்திட 
பாலும்,பழமும் 
தேனின் சுவையும் போலே 
இருவரின் இல்லறவாழ்வும் 
இனித்திட வாழ்கவே...
உணர்வுகளை மதித்து 
உயிறேன நினைத்து
விட்டு கொடுத்து 
உறவுகள் போற்றிட 
வாழ்கவே...
ஆலமரம் போலவே 
வேரூண்டி விழுதுகள் விட்டு 
வம்சம் விருட்சம் பெற்று 
வாழ்கவே...
என்றென்றும் பல்லாண்டு காலம் 
நலமுடனும் நற்க்குனமுடனும்
நலம் வாழ வாழ்த்துகின்றோம்...!

lundi 10 août 2015

இந்த ஜென்மம் முழுதும்...!

எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் 
வழமை ஆகிவிட்டது என் வாழ்வில் 
பலமுறை ஏமாந்த பின்பும்  
தெளியவில்லை என் மனம் 
எதையும் விருப்பிட கூடாதென 
அற்ப்பமனம் ஆசை படுவதையும் 
ஏமாந்து போவதையுமே 
வரமாய் பெற்றுவிட்டது போல் 
இந்த ஜென்மம் முழுதும்...!

vendredi 7 août 2015

ஏதோ ஓர் மாற்றம்...!


ஏதோ ஓர் மாற்றம் 
அறியாத மன தோற்றம்
புதிதாய் ஒரு அச்சம் 
உள்ளே புயல் வீசும் 
தென்றலோடு மலர் வாசம் 
உணர்வுகளோ கவி பேசும் 
உதடு தானாய் சிரிக்கும் 
இதயத்திலே ஒளி தெறிக்கும் 
கனவுகள் கண்ணிலே குவியும் 
கற்பனையில் உள்ளமே மிதக்கும்...!

vendredi 31 juillet 2015

காத்திருகின்றேன்...!


தனிமையில் துவண்டு 
வாடி போகவில்லை 
தலைவனே 
உன்கரம் கோர்த்திட 
தவமே புரிகின்றேன் 
கனவுகள் சுமந்து 
கற்பனையிலே மிதக்கின்றேன் 
உன் வருகை ஒன்ரிட்கே
விழி மூடாமலே 
காத்திருகின்றேன்...


mercredi 29 juillet 2015

என்னுயிர் நட்பே கூறிடு...!


சோகம் வரும் போதெல்லாம் 
ஆறுதல் தேடி உன்னிடம் வந்தேன் 
மனதில் குழப்பமென 
அமைதி தேடி உன்னை நாடினேன் 
இதயத்தில் வலியென 
மருந்து  தேடி உன்னை அழைத்தேன் 
வாழ்வே கசப்பென
இனிமை தேடி உன்னிடம் பேசினேன் 
எப்போதும் அருகில் இருந்த நீ 
இன்று விலகிச்செல்வது ஏனோ 
என்னுயிர் நட்பே கூறிடு 
நீ அருகிலில்லை என்று அறிந்து 
அனைத்தும் என்னை சூழ்ந்தது இன்று 
தாங்கிட முடியவில்லை என்னால் 
மீண்டும் என்னிடம் வந்துவிடு
உன் நட்பாலே இன்பம் தந்துவிடு...!

நட்போ இன்று எதிர் திசை நோக்கி..!


உண்மையான நட்பு 
உரிமையான நட்பு 
புரிந்து கொண்ட நட்பு
பிரிந்திட கூடாத நட்பு 
நினைத்தபடி நான் 
நட்பை நெருங்கிட 
என் நட்போ இன்று 
நகர்ந்து செல்கின்றது 
எதிர் திசை நோக்கி..!

mardi 28 juillet 2015

ஐயா அப்துல் கலாம்...!


தமிழிற்க்கு ஓர் இழப்பு 
விஞ்ஞானத்திற்கே பேரிழப்பு 
ஐயா அப்துல் கலாம் 
இந்த மண்ணை விட்டு 
மறைந்து போனது 
உங்கள் நடமாற்றம் தான்
எப்போதும் அழியாது 
பொக்கிசமாய் இருக்கும் 
நீங்கள் படைத்த சரித்திரம்
உங்கள் அடையாளம் 
வாழும் தலைமுறைக்கும் 
வரபோகும் தலைமுறைக்கும்  
எடுத்துக்காடாய் நீங்கள் 
என்றும் இந்த பூமியிலே 
வாழ்வீர்கள்....


lundi 27 juillet 2015

மெதுவாய் நகர்கின்றேன்...!


விளையாட்டு சிறுமியாய்
குருபுகள் பல செய்து  
கழித்திட்ட காலங்கள் போக...
பெற்றவர்கள் வார்த்தையில்   
திருமண பேச்சொன்று
எனது காதினில் பாய...
குமரியாகிய எண்ணம் 
மனதில் தோன்ற...
நண்பர்களின் கேலிகள் 
உற்றாரின் கிண்டல்கள்
உறவுகளின் தேடல்கள்
புதிதாய் தோன்றிட... 
உதடினில் புன்னகை 
தானாக பூத்திட...
கற்பனை கனவுகள் 
உற்றாய் பாய்ந்திட...
என் மனமே பேசியது...
யாரவன்...?
உருவம் எதுவோ...? 
உணர்சிகள் எப்படியோ...? 
அதிகம் கோவம் உள்ளவனோ...?
அன்பை  பொலிபவனோ...?
சந்தேகம் உடையவனோ...?
சத்தியம் ஆனவனோ...?
அனைத்து வாழ்வானோ...? 
அடிமையாய் வாழ்வேனோ ...? 
ஆயிரம் கேள்விகள்
தேனிகளாய் சுற்ற...
அழகான ஒரு மாற்றம்...
அறியாத பயம்...
புரியாத குழப்பம்... 
அனைத்திற்கும் பதில்
தேடும் நான்...
காலத்தை நோக்கி
மெதுவாய் நகர்கின்றேன்...

நம்மை தேடி வரும் உறவுகள்...!

நம்மை தேடி வரும் உறவுகள்
நம்மை நேசிக்கின்றார்களா
என்று ஆராய்வதை விட 
நாம் அவர்களை 
உண்மையாக 
நேசித்தாலே போதும் 
நம் வாழ்வே 
சொர்க்கமாய் 
மாறும்...!

jeudi 23 juillet 2015

உனக்காக மட்டுமே...!

முரண்டு பிடிக்காமலே 
முற்றுகையிட்டு விட்டாய் 
நம் காதலிட்கு  
புரிந்துகொள் உயிரே 
என் மௌனத்தின்  காரணம் 
நான் உனக்கு ஏற்றவள்லில்லை 
என்று நீயென்னியதால் மட்டுமே 
என் தேகம் தீயில் வேகும் வரை 
உன்னை மட்டும்தான் சுமப்பேன் 
என் இதயத்தில் மட்டுமல்ல 
என் உயிரிலும் 
நீயென்னை புரிந்து கொண்டால் 
பிடித்திருந்தால் மீண்டும் வா 
காத்திருப்பேன் அன்றும் 
உனக்காக மட்டுமே...!

mercredi 22 juillet 2015

உன் நினைவுகள் அருகிருப்பதால்...!


தடுமாறும் மனதில் மாறாதிருக்கின்றது 
உனது நினைவுகள் ஒன்றுதான் 
உணவுகள் மறந்து விட்டேன் 
உறக்கமும் இழந்து விட்டேன் 
கனவுகள் மட்டும் நிறைகின்றது 
உன்னைச்சுமந்த நெஞ்சதினிலே 
கானல் நீர் போலே நீ 
காணும் விழியிலும் நீரே 
பாய்ந்தே ஓடுகின்றது 
பெருக்கெடுத்த வெள்ளம் போலே
உன்னை உயிராக நேசித்தேன் 
பதிலுக்கு இன்று நான் 
உலகத்தையே இழந்தேன்
மரணித்தால் மறந்திடுவேன் 
ஆகையால் நாடவில்லை 
அந்த மரணத்தையும் கூட 
நரகம் தான் நீ இல்லாத வாழ்வு 
இருந்தாலும் சுகம் தான் 
உன் நினைவுகள் அருகிருப்பதால்...! 

dimanche 12 juillet 2015

எரிகிறது இதயம் தன்னிலே...!


சில நாட்கள் சொர்க்கம் 
என்னவன் அருகிலே 
பூமியே நரகம் 
அவன் பிரிவிலே  
மீண்டும் வருவான் 
பேராசை எனக்குள்ளே 
கனவு நான் கண்டேன் 
கலைத்தானே நிஜத்திலே 
என்னை மறந்தே போனான்
வெகு விரைவிலே 
அவன் பாதியாய் ஒருபெண்
சேரத்தானே தன்னுயிரிலே 
கண்டதும் அதிர்ந்தேன் 
சொட்டியது நீர் விழியிலே 
கற்பனை உள்ளம் 
கருகியதே இன்னாளே 
மறந்திட நினைத்தேன் 
எரிகிறது இதயம் தன்னிலே...!

vendredi 3 juillet 2015

மாறிப்போகும் மானிடம்...!




அறியாதா பெண்மை 
கனவுகள் பல கண்டு 
கற்ப்பனையில் மிதப்பவள்
பெற்றவர் பார்ப்பவனை 
மறு பேச்சின்றி மணம் கொண்டு 
புது வாழ்வு தொடங்கிட 
கடக்கும் சில ஆண்டு சிரித்து பழகிவிட்டு 
சில்லறை மனிதனாய் மாறிடும் போதே 
மனம் உடைந்து போகின்றாள் 
யாரிடம் சொல்லியழுதிட
பெற்றவர்கள் மனம் உடைந்து 
என்ன ஆவார்கள் 
மற்றவர்கள் பேசும் வார்த்தைகள் 
மீண்டும் மீண்டும் கூறு போடும் 
இவள் மனதையே 
காசு பணம் கேட்டாளா 
இல்லை அன்பை தானே கேட்டாள்
சொத்து சுகம் கேட்டாளா
இல்லை அரவணைப்பை தானே கேட்டாள்
அவள் மனம் புரிந்து கொள்ள முடியாத நீ 
மணம் கொண்டது எதற்கு 
பிள்ளைகள் பெற்றது எதற்கு 
உன் இஸ்டம் போல்
நீ தனிமையிலே 
வாழ்ந்து விட்டு போயிருக்கலாமே
பாவம் அறியாத பெண்மை 
என்ன செய்தாள் 
அவள் வாழ்வை புதிராக்கிவிட்டாயே 
கசங்கிய விழியோடு 
கண்ணீரால் அவள் வரைந்தாள்...!

vendredi 10 avril 2015

சிறு பொம்மை போலே...!


வாசமில்லா மலருக்கு 
வாசம் சேர்த்திடவே 
நீ வருவாயேன்றே
காத்திருக்கின்றேன் 
மொட்டான என் காதலை 
மலர செய்திடுவாயேன்றே 
கற்பனையில் நான் 
காத்திருக்கின்றேன்
சிறு பொம்மை போலே...!

நேசிகின்றேன்...!

உன்னை மறந்துவிட்டேன் தான் 
உதடுகள் பொய் சொல்ல கூடும்  
ஆனாலும் என் விழியோரம் 
வழியும் நீர் கூறும் 
என்றும் உன்னையே தான் 
நேசிகின்றேன் என்று...!

சுகம் காண்கிறேன்...!


தனிமையில் விட்டு செல்கின்றாய்
என்று தான் நான் எண்ணிவிட்டேன்
நீயோ உன் நினைவுகளையும் விட்டு 
என் சோலை வனத்தை அழித்து
பாளைவணமாய் மாற்றியமைத்து 
விழியில் படாது மறைந்திருக்கின்றாயே
துடிதுடிக்கும் இதயத்தோடு 
தவித்துக்கிடக்கும் நான் 
உன் நினைவுகளோடு பேசி 
சுகம் காண்கிறேன்...!

jeudi 9 avril 2015

புரியாத புதிர்கள்...!


புரியாத புதிர்கள் 
மறைந்து கிடக்கும் உண்மைகள் 
மனதுக்குள்ளே குழப்பங்கள் 
எதுவும் தெலிவில்லை
என்ன செய்வதோ 
கசக்கும் கஷாயமோ  
இல்லை இனிக்கும் தேனோ 
என் வாழ்க்கை 
எனது விழிகளை பறித்து 
சொர்க்கம் இதுவென்றால்
நம்பிடும் நிலைமை 
எனது....


mercredi 8 avril 2015

இறந்து போன இதயம்...!


  

கற்ப்பனைகளும்  ஆயிரம்தான் 
கனவுகளும் அதிகம் தான்
கண்டவுடன் ஆச்சரியம் தான் 
எனக்கு...
உன்னை கண்டவுடன் 
ஆச்சரியம் தான்
எனக்கு...
கற்ப்பனைகளும்  கனவுகளும் 
நிஜமாகவே 
நிறைவேறிடும் போது
நடப்பதை எண்ணியே 
மனதெங்கும் ஆச்சரியம் தான்...
என் மனப்புத்தகம் 
படித்துவிட்டுத்தானோ 
உன்னை அனுப்பி வைத்தான் 
இறைவன்  
சந்தேகம் தான் உள்ளுக்குள்ளே…
அட ஆசைப்பட்டதெல்லாம் 
ஒவ்வொன்றாய் நிகழ்ந்திட 
சில சஞ்சடங்கள்,தடங்கல்கள் 
திஷ்ற்றி போலே வந்திட...
மனம் வருந்தும் நேரம்கூட 
உன் அன்பாலே மாற்றிடுவாய்
சோகத்தையும் அழித்து
இன்பத்தை தந்திடுவாய்...
அதிஸ்டம் இல்லாதவள்
என்றெண்ணிய எனை 
உலகத்தை வென்றதை போல் 
மகிழ வைத்தாய் நீ ...
போராடங்கள் வந்தாலும் 
மரணமே வந்தாலும் 
உன்னை விட்டுச்செல்ல மாட்டேன் 
வாக்குகள் பலம் தான்...
நம்பிக்கை வேறூண்டி
விழுதுகள் விட்ட பின்னர் 
யார் முயன்ற போதும் 
அழித்திட முடியவில்லை 
எவராலும்...
உன் மேல் நான் கொண்ட 
நம்பிக்கையை...
வாழ போகும் காலமென்ன 
இனி எடுக்கப்போகும் ஜென்மமும்
உனக்காகத்தான் 
உறுதியாக நான்...
காலம் கனியவில்லை 
நேரம் நகரவில்லை 
யாரும் மசியவில்லை 
இவளோ உனக்கு அதிஷ்டமில்லை...
ஒருபோதும் அழியாது என்னன்பு 
எனக் கூறிவிட்டு 
உனக்குள் அன்பை சுமந்து
நீயெனை விட்டுச்சென்றால் 
மறந்திடுவேன் என்று எண்ணி விட்டாயோ...
காலம் ஓடுகின்றது 
நேரம் மாறுகின்றது 
நாட்களும் மறைகிறது 
உனது நினைவுகளோ மாறது 
என்னை கொள்கின்றது 
இறந்து விட்ட இதயத்தில் 
இடமெங்கே குடுப்பேன் 
இன்னோர் உறவுக்கு 
நிச்சயம் முடியாது...